ட்விட்டரின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய எலான் மஸ்க் (Elon Musk) அந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரியாக பதவியேற்க தீர்மானித்துள்ளார்.
44 பில்லியன் டொலர் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகியுள்ளது.
இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரியாக செயற்பட்ட Parag Agrawal மற்றும் நிதி தலைவராக கடமையாற்றிய Ned Segal ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் சென் பிரான்சிஸ்கோ தலைமைகத்தை விட்டு வௌியேறியுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உள்நாட்டு விதிமுறைகளுக்கு ட்விட்டர் இணங்க வேண்டுமென இந்திய அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
Reported by:Maria.S