குறைந்த எடை பாண் விற்பனையில் ஈடுபட்ட 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த எடை பாண் விற்பனை செய்வோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல குறிப்பிட்டார்.
ஒரு இறாத்தல் பாணின் எடை 450 கிராமாக உள்ள நிலையில், குறைவான எடை பாண் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு 1,000 ரூபா முதல் 10,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 10,000 ரூபா முதல் 100,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அதிக விலையில் பாண் விற்பனை செய்வோர் தொடர்பில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Reported by :Maria.S