அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும்  அழகு சாதனப் பொருட்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும்  அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

குறித்த துறைகளில் தொழில் செய்பவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த மேன்முறையீடுகளை கருத்திற்கொண்டு மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் வழங்கியுள்ள பரிந்துரைக்கு அமைய, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இன்று (21) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இலங்கை சுங்கப் பிரிவிற்கு  கண்காணிப்பு விஜயம்  மேற்கொண்டிருந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்  மூலம் 1465 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து,  முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளை ஆராய்ந்து, அந்த பட்டியலில் இருந்து  708 பொருட்கள் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *