சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மோசடி நடவடிக்கைகள் மூலம் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபரை ,சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு அன்பளிப்பு வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் இருந்து 11 கொடியே 6 இலட்சத்து 27 ஆயிரத்து 175 ரூபாவை பல்வேறு வங்கி கணக்குகளின் ஊடக பெற்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் 30 வயதுடையவர் எனவும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reported by :Maria.S