அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இன்று(10) குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர், பிரதிவாதிகளான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொசவின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் கஜா மொஹிதீன் மொஹமட் சாகிர் ஆகிய மூவரையும் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முன் பிணைக்கமைவாக விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்து குறித்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியதையடுத்து, ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு எதிர்வரும் முதலாம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
2011ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சுமத்தி 03 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்தது.
Reported by :Maria.S