நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர பெயார்வே கொழும்பு (Fairway Colombo ) தெருக்கடைகளை சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
கோட்டையில் உள்ள டச்சு மருத்துவமனை வளாகத்தில் குறித்த உணவு திருவிழா நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதில் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற நிகழ்வு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒழுங்கு செய்யப்பட்டதுடன் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொவிட் தோன்றினால் இந்த நடவடிக்கை தடைப்பட்டதுடன் தற்போது இந்த உணவு திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடைகள் ஒவ்வொரு மாதமும் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.
இந்த புதிய முயற்சி மூலம் அதிகளவு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கும் , கொழும்பு நகரில் இரவு நேரங்களில் தடைகள் இல்லாமல் உணவை பெற்றுக்கொள்வதற்கும் இதன் மூலம் இலங்கையின் செழிப்பான பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் எதிர்பார்க்கப்படுகிறது
Reported by:Maria.S