பேராதனை பல்கலைகழகத்தை சேர்ந்த சட்டப் பட்டதாரி மாணவர்கள்

தாக்கப்பட்ட சம்பவம்

பேராதனை பல்கலைகழகத்தை சேர்ந்த சட்டப் பட்டதாரி மாணவர்கள் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் வைத்து (கடந்த 14.09.2022)பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினரால்  மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட வாய்மொழி மற்றும் உடல் ரீதியான தாக்குதலை பல சட்ட மாணவர் சங்கங்கள் கண்டித்துள்ளன.

இறுதி ஆண்டு மாணவர் குழுவொன்று, மூன்றாம் ஆண்டு மாணவர் குழுவொன்றின் மீது சிற்றுணவகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட பதில் பொறுப்பதிகாரியான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்திருந்தார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களுள், இரு மாணவிகள் கண்டி வைத்தியசாலையிலும், ஒரு மாணவன் பேராதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொலைபேசியில் பதிவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையில் வெளியே மலிந்து போயுள்ள வன்முறை குணத்தை விட படித்த மாணவர்களிடம் தான் அதிகப்படியான வன்முறைக்கலாச்சாரம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனப்பட்டு விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

சட்டப் பிரிவின் பழைய மாணவர்கள் (பேராதெனியப் பல்கலைக்கழகம்), இலங்கை சட்ட மாணவர் சங்கம் மற்றும் சுதந்திர சட்ட மாணவர் இயக்கம் ஆகியவை இந்தத் தாக்குதலைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *