எதிர்வரும் திங்கட்கிழமை (19) முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோக சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச பொது விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது, ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யாதவர்களுக்கு அன்றைய தினம் எவ்வித சேவைகளும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்யாதவர்களை அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஏனைய சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
Reported by:Maria.S