உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜொமனியில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
அதேவேளை இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு மாற்றீடாக புவியை வெப்பமாக்கும் வாயுக்களை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும் 9.3 கோடி யூரோ (சுமாா் ரூ.737 கோடி) செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 தொன் காபனீரொட்சைட் வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Reported by :Maria.S