முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு கோரி தொழில்சார் முச்சக்கர வண்டி தொழிலாளர் சங்கத்தினர் பிலியந்தலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொழில்முறை முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவிக்கையில்;
ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓட்டுனர்களின் வயிற்றில் அடித்துள்ளது. QR முறையில் 5 லீற்றர் பெற்றோல் எங்களுக்குப் போதாது.
பிலியந்தலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நடைபெறும்.
மேலும் இந்த அரசாங்கம் வீட்டிற்குச் செல்லும் வரை எங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.
Reported by :Maria.S