நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நாளை(24) புதன்கிழமை காலை 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் வந்துதித்த மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் கோவிலுக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது. அந்தத் தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தால் அதன் அபாயத்தை உணர்ந்த ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் புதிய தேர் ஒன்றை 1964ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை ஆரம்பித்து வைத்தார்.
அந்தத் தேரே 1964ஆம் ஆண்டு முதல் மகோற்சவ தேர்த் திருவிழாவின் போது இழுக்கப்பட்டு வந்தது. அத்தேரே தற்காலத்தில் மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று நாளை (24) வெள்ளோட்டம் காண்கிறது.
—————-
Reported by :Maria.S