முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் போதாது-அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம்

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு தமது பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த நிலைமையை அரசாங்கம் எவ்வளவோ விளக்கிச் சொன்னாலும் எந்தப் பயனும் இல்லை எனவும் அதனால் அதிகளவான உறுப்பினர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.


இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


தற்போதும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்துக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை எனவும் இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர்கள் கைகொடுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
———
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *