50 ஆண்டுகளின் பின் நடிகையிடம் மன்னிப்புக் கேட்ட ஒஸ்கார் குழு

 நடிகை சாஷின் லிட்டில்ஃபெதரிடம் (Sacheen Littlefeather) 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒஸ்கார் குழு மன்னிப்புக் கேட்டுள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு கோட்ஃபாதர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது நடிகர் மார்லன் பிராண்டோவுக்கு ( Marlon Brando ) அறிவிக்கப்பட்டது.


ஆனால் நடிகர் மார்லன் பிராண்டோ ( Marlon Brando) தனக்குப் பதிலாக அமெரிக்க பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷின் லிட்டில் ஃபெதர் என்பவரை அனுப்பி வைத்தார்.


மேடையேறிய சாஷின், அமெரிக்க பூர்வ குடிகளை ஹொலிவுட் திரையுலகம் புறக்கணிப்பதாகவும் அதன் காரணமாக மார்லன் பிராண்டோ இந்த விருதை ஏற்க முடியாது எனக் கூறியதாகவும் அவரது கடிதத்தை வாசித்தார்.


மேலும் ஹொலிவுட் திரையுலகம் தொடர்ச்சியாக அமெரிக்க பூர்வகுடிகளைத் தவறாக சித்திரிப்பதாகவும் தெரிவித்தார். இது அன்றைய காலகட்டத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.


இதன் காரணமாக நடிகை சாஷினுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தற்போது சாஷினுக்கு  75 வயதாகிறது.


இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பின் சாஷின் (Sacheen Littlefeather) அடைந்த இழப்புக்காக ஒஸ்கார் குழு அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
———-
Reported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *