சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் 10% மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக உள்ள மருந்துப் பட்டியலில் அத்தியாவசிய மருந்துகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மருந்துகள் கிடைக்காவிட்டாலும், மருத்துவமனை எந்த சிகிச்சையையும் அறுவைச் சிகிச்சையையும் நிறுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று, பற்றாக்குறையாக உள்ள மருந்துகளின் பட்டியலை அணுகுமாறு நன்கொடையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், நன்கொடையாளர்கள் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது நன்கொடையாக வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
————–
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *