கொழும்பில் ஒருவரது மாத செலவு 13,421-தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 
ஜூன் 2022 மாதம் தொடர்பில் வெளியாகியுள்ள இந்தப் புதிய தரவுகளின்படி,தேசிய ரீதியில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச செலவு ரூ. 12,444 என கணிக்கப்பட்டுள்ளது.


இது தவிர அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு குறைந்தபட்ச செலவு மாவட்டத்துக்கு ஏற்ப தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரது செலவு ஒப்பீட்டு ரீதியில் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு கொழும்பு மாவட்டத்தில் ஒருவரது ஒரு மாத செலவீனம் ரூ. 13,421 என கணிப்பிடப்பட்டுள்ளது.


மொனராகலை மாவட்டமானது குறைந்தபட்ச செலவு கொண்ட மாவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அத்தொகை ரூ. 11,899 ஆகும்.


2022 ஜூன் மாதத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எனினும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2022 ஜூலையில் 60.85 ஆகவும் உணவுப் பணவீக்கம் 90.9% ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ——————-

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *