உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பால் முட்டை மற்றும் கோழி விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்குப் பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவனங்களின் விலை அதிகரிப்பால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ. 63க்கும், சிவப்பு முட்டை ரூ. 68க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
கோழித் தீவனம் மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றின் விலை ரூ. 15 முதல் ரூ.115 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் கறக்கும் பசுக்களுக்கு வழங்கப்படும் விசேட வகை கால்நடை தீவனமும் உயர்த்தப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பண்ணைத் தொழிலை தொடர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
——————–
Reported by :Maria.S