நியூயோர்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஸ்டி மீது கத்தி குத்து தாக்குதல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்றார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தினார். இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். அதன்பின், மருத்துவ ஹெலிகொப்டரில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து நிறுத்திப் பிடித்தனர். பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பிந்திய தகவலின் படி இப்போது வென்டிலேட்டரில் (Ventilator) இருக்கின்றவரான ருஷ்டியால் பேச முடியவில்லை  எனவும் இவர் தனது ஒரு கண்ணை இழக்க நேரிடும் எனவும் நியூயோர்க்கில் இவர் சிகிச்சை பெறும் வைத்தியசாலை அறிக்கைகள் கூறுகின்றன.
———-

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *