கிழக்கு சீனாவில் ‘லாங்யா’ வைரஸ் பரவி வருவதாகவும், இன்று (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லாங்யா என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளை பாதிக்கும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸுக்கு மருந்தோ தடுப்பூசியோ உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சீனாவில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவத் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லாங்யா’ வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. ‘கொவிட்-19’ வைரஸ் 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானிலிருந்து பரவத் தொடங்கியது.
தற்போது சீனாவின் கிழக்கே ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் ‘லாங்யா’ வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிக காய்ச்சல், சோர்வு, இருமல், உணவின் மீது வெறுப்பு, தசை வலி, உடல்நலக் குறைவு, வாந்தி மற்றும் தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். உடலில் பிளேட்லெட்டுகள் குறையும். ‘லாங்யா’ வைரஸ் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தையும் செயலிழக்கச் செய்யும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .
———–
Reported by : Maria.S