கனடாவில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் அதிகமாக உள்ளன

கனடா தற்போது 2022-ஆம் ஆண்டில் 430,000-க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை (PR) அழைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்,  நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் கனடா  நிரந்தர வதிவிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கின்றது.


கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் வெற்றிடமாக உள்ளன. கனடாவில் அதிக வேலை வாய்ப்பு விகிதம், குறைந்த வேலையின்மை விகிதத்துடன் இணைந்து, தற்போது புலம்பெயர்ந்தோருக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பைக் கொண்டு வருகிறது.


அதன்படி கனடா தற்போது 2022ஆம் ஆண்டில் 430,000க்கும் அதிகமான நிரந்தரக் குடியிருப்பாளர்களை அழைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கு 2024ஆம் ஆண்டில் 450,000-ஆக உயரும் என்று CIC செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.


கடந்த மாதம்,  சில மாநிலங்களில் வேலை வெற்றிடங்கள் மிக உயர்ந்த நிலையை எட்டியதாக மற்றொரு அறிக்கை கூறியது.


இந்நிலையில்
 1.கட்டுமானத் துறையில் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 89,900 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இது மார்ச் மாதத்தில் இருந்து 5.4% மற்றும் கடந்த ஏப்ரலில் இருந்து கிட்டத்தட்ட 45% அதிகரித்துள்ளது.
2.தொழில் முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் வேலை வெற்றிடங்களும் சாதனை அளவை எட்டியுள்ளன.
3.போக்குவரத்து மற்றும் கிடங்கு; நிதி மற்றும் காப்புறுதி, பொழுதுபோக்கு மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளிலும் பணி வெற்றிடங்கள் அதிகரித்துள்ளன.
4.கல்விச் சேவைத் துறையில் வேலைவாய்ப்பு முந்தைய மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் 9,700 அதிகரித்துள்ளது.
5.தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு பெப்ரவரி மாதத்திலிருந்து 10%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
————-
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *