எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணித் திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து மடு புகையிரத நிலையத்துக்கும், அநுராதபுரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்துக்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் மடு ஆவணித் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தாலும் விசேட ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மடு புகையிரத நிலையத்திலிருந்து மடுத் திருத்தலத்துக்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கொவிட் தொற்றுப் பரவல் மீளவும் ஆரம்பித்துள்ளமையால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
—————-
Reported by :Maria.S