2026இல் பலமிக்கதொரு பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம்: ஜனாதிபதி ரணில்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேர்வில் நான் ஜனாதிபதியானேன். நான் பாரிய பொருளாதார நெருக்கடி ஒரு புறத்திலும், மக்கள் எதிர்ப்பலைகள் மறுபக்கத்திலும் இருக்கும் தருணத்தில், எனினும் நாட்டுகாக இந்த சவாலை ஏற்க தீர்மானித்தேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

9 ஆவது பாராளுமன்றத்தில் 3 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வரலாறு காணாத நெருக்கடிக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டாலேயே இதிலிருந்து மீள முடியும். நாட்டில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியின் தீர்மானத்துக்கு இணங்கி செயற்படுவதல்ல. பொதுக் கொள்கை வரம்பின் கீழ் அனைத்து கட்சிகளின் யோசனைகளுடன் ஸ்தாபிக்கப்படும் அரசாங்கமாகும்.

ஏனைய நாடுகளிடம் கடன்கள் கிடைக்கும் வரை எதிர்பார்க்காமல், ஏற்றுமதி வருமானங்கள், அந்நியச் செலாவணிகள் மூலம் எரிபொருள் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டெழும் முயற்சியின் முதற்படியாக சர்வதேச நாணய நிதியத்துடன் 4 ஆண்டு திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. முதல் சுற்று பணிக்குழாம் மட்ட பேச்சுவார்த்தையை மிக விரைவில் சாதமாக முடிவுறுத்துவது எமது எதிர்பார்ப்பு.


எதிர்வரும் 25 வருடங்களுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கையொன்றை வகுப்போம். 2026 ஆம் ஆண்டாகும் போது பலமிக்கதொரு பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அரச தலையீடு இன்றி செயற்படும் மக்களவை ஒன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உரையின் நிறைவையடுத்து, பாராளுமன்றம் எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது.
————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *