அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்: மைத்திரிபால

அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கொழும்பு, காலிமுகத் திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர். இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.


“ காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சிறந்தது. அதனை விடுத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில், அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
————–
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *