இங்கிலாந்தில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முறையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பண வீக்க உயர்வு எனவும் தெரிவித்துள்ளனர்.
வாகன எரிபொருள், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்த சில்லறை பண வீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் உக்ரைனில் நடைபெறும் போராலும் கொரோனா கட்டுப்பாடுகளாலும் பல நாடுகளில் பண வீக்கம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reported by :Maria .S