நாட்டில் நீண்ட நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் நேற்று நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கும், நாளை மறுதினம் ஏனைய இடங்களுக்கும் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
————
Reported by : Maria.S