ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள்அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகொப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயற்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம்அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல் நல பிரச்சினை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். இந்த நிலையில் அபே மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
——————
Reported by :Maria.s