கடந்த 70 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான வரட்சி காரணமாக இத்தாலிய அரசாங்கம் நேற்று (05) நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வறட்சியால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் மிக நீளமான நதியான 650 கிலோமீற்றர் நீளம் கொண்ட போ நதியும் வறண்டு விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
————
Reported by:Anthonippillai.r