இந்த நேரத்தில் இலங்கைக்கு எந்த உதவியும் வழங்கப்பட மாட்டாது என கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவர் Mizukoshi Hideaki தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேளையில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் அது தவறாக நிர்வகிப்பதற்கான அபாயம் இருப்பதாகவும் ஜப்பானியத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கைக்கான உதவிகளை பின்னர் பரிசீலிக்க முடியும் என ஜப்பானியத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளதாக தமிழ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
———–
Reported BY:Anthonippillai.R