ரஷ்ய எண்ணெய்க்கு விலை வரம்புகளை விதிக்கும் வகையில் ஜி7 நாடுகள் செயற்பட்டால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 200 டொலரைத் தாண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்புகளை விதிக்கும் யோசனையை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது.
உலகச் சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 115.7 டொலராகவும், அமெரிக்க டபிள்யூ டி ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109.81 டொலராகவும் உள்ளன.
—————
Reported by :Anthonippillai.R