இந்தியாவிடமிருந்து 04 எரிபொருள் தாங்கிகளை பணத்துக்கு கொள்வனவு செய்ய இலங்கை முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தலா 40,000 மெட்ரிக் தொன் கொண்ட 04 கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தற்போது உலகச் சந்தையில் இருந்து மொத்தமாக எரிபொருளை கவர்ச்சிகரமான கழிவுடன் வாங்குகிறது. குறிப்பாக, உலக விலையை விட கணிசமாக குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருளை வாங்குகிறது.
இதன்படி, இந்தியாவின் உதவியுடன் உலகச் சந்தையில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவது டீசல் கப்பலை இலங்கைக்குக் கொண்டுவரும் திட்டம் உள்ளது.
அதன்பின் தேவைக்கேற்ப பெற்றோல் தாங்கிகளைக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. எனினும், எரிபொருளுக்காக இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் நிவாரணமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by:Anthonippillai.R