உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் கனடாவின் 3 நகரங்கள் முன்னணி

உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ஆம் இடத்தையும், வன்கூவர் 5ஆம் இடத்தையும், ரொரன்ரோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.


நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


பொருளியல் புலனாய்வுப் பிரிவின் வருடாந்த தரப்படுத்தல் பட்டியலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதற்கு முன்னரும் கல்கரி நகரம் இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்திருந்த போதிலும் இந்தத் தடவையே 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.


கல்கரி நகருக்கு இவ்வாறான ஓர் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சி அளிப்பதாக நகர மேயர் ஜொயொட்டி கொன்டான் தெரிவித்துள்ளார்.


இந்தப் பட்டியலில் முதல் இடத்தை ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரமும், டென்மார்க்கின் கோபென்கன் நகரமும் வகிக்கின்றமை குறிப்பிடத்கத்கது.
இதேவேளை, இந்தத் தர வரிசைக்கான காரணிகளில் வாழ்க்கைச் செலவு உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
———-
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *