தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க நெருங்கிய அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா இன்று உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகாரச் செயலாளர் இன்று(23) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
மேலதிக நிதியுதவிகளை மதிப்பிடுவதற்காக இந்திய விசேட தூதுக்குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.
இந்தியக் கடன் உதவி மூலம் இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் உரங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதில் இந்திய அரசாங்கமும் அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் தொடர்ந்து ஆதரவளித்த இந்திய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தை இலங்கை உடனடியாக சமாளிக்கும் என தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
—————
Reported by:Anthonippillai.R