காலாவதியான ரின் மீன்களின் உற்பத்தி திகதி மற்றும் விலை மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நேற்று (20) மாலை தொழிற்சாலை ஒன்றில் இருந்து சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ரின் மீன்கள் கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பன்னல முகலான பிரதேசத்தில் இந்தத் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மிகவும் நுணுக்கமாகவும், நவீன இயந்திரங்களுடனும் இயங்கும் இத்தொழிற்சாலையில் அவற்றின் உதவியுடன், காலாவதியான ரின் மீன்களின் விலை மற்றும் உற்பத்தி ஆண்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
சுமார் 17,000 ரின் மீன்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.
————-
Reported by:Anthonippillai.R