பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேர், முங்கர், கதிஹார், மாதேபுரா மற்றும் சஹஸ்ராவில் தலா ஒருவர் என மொத்தம் 17 பேர் பலியாகினர் எனத் தெரிவித்தது.
மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், அவர்களது குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
————
Reported by: Anthonippillai.R