ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென் ஹோங்கினால் நேற்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சுகாதார அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களும் இவற்றுள் உள்ளடங்குவதாகதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————–
Reported by:Anthonippillai.R