சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்க கனடிய அரசு தீர்மானம்


சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசு முடிவு செய்துள்ளது.

 
இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர் கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் கூறும்போது, புகையிலைப் பொருட்களில் தனியாக இது போன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும். சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்கச் செல்லும் இளைஞர், சிகரெட் பக்கெற்றின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களைப் புறந்தள்ளி விட்டுச் செல்கிறார். இது தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.

 
இந்த எச்சரிக்கை பற்றிய புதிய மாற்றத்திற்கான ஆலோசனைக் காலம் இன்றில் இருந்து தொடங்கவிருக்கிறது. வரும் 2023ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இருந்து புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது. அந்த சிகரெட்டுகளின் மீது பதிக்கப்படும் சரியான வாசகம் மாற்றப்படலாம் எனக் கூறியுள்ள பென்னட் தற்போது, ஒவ்வொரு முறை இழுக்கும்போதும் விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகம் ஒப்புதலுக்காக உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் உலக அளவில், ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *