டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இந்நோய் வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 8 நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி என அதிக ஆபத்துள்ள 8 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் 82 சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களை டெங்கு பரவும் அபாயமுள்ள பிரதேசங்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் இவ்வருடம் இதுவரை 26,622 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
————
Reported by :Anthonippillai.R