பேருந்துக் கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் – பந்துல குணவர்தன

ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்துக் கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், இதற்காக எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபா செலவாகும் நிலை காணப்படுகிறது.

 

500 ஆசனங்களுக்கு ஒரு பயணியிடம் இருந்து 2000 ரூபா அறவிடப்பட்டாலும் 1 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்படும். ஆனால் சுமார் 300,000 ரூபா நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *