கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸுக்கான கனேடியத் தூதரை அறிவித்துள்ளார்.
Stéphane Dion என்பவர், பிரான்சுக்கான கனேடியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரே கனடா பிரதமரின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவுக்கான விஷேட தூதுவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசில் பல்வேறு குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகித்துவந்த Dion, சமீபத்தில் ஜேர்மனிக்கான கனேடியத் தூதராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
————-
Reported by:Anthonippillai.R