3,500 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று(30)  பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.


காலநிலை சீரடைந்தால் இன்றே கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கிவிட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


பின்னர் தரச் சோதனை செய்ய வேண்டும், அதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 10 மணி நேரம் ஆகும்.

 
அதன்படி, புதன்கிழமை (ஜூன் 01) முதல் சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க முடியும் என லிட்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
——————–
REPORTED BY .ANTHONIPPILLAI.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *