எரிபொருள் நிரப்பு நிலையங்களை தடுத்து கலகத்தை ஏற்படுத்தினால், எரிபொருள் நிரப்பப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று காலையும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளை மறித்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
—————-
Reported by:Anthonippillai.R