புனிதரானார்உலகின் முதல் தமிழன் தேவசகாயம் பிள்ளை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேற்று ஞாயிற்றுகிழமை(15ஆம் திகதி) வத்திக்கானில் முதல் உலகத்தமிழனை புனிதர் நிலைக்கு உயர்த்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு வத்திக்கானில் உள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில்  புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.


தமிழகத்தின் இந்துக் குடும்பத்தில் பிறந்து, வேதத்தைக் கற்று, பின் கத்தோலிக்கனாக திருமுழுக்கு பெற்று, பின் மறைசாட்சியாக இறந்து போன தேவசகாயம் பிள்ளை அவர்களை இன்னும் 9 முத்திப்பேறு பெற்றவர்களோடு புனிதர் நிலைக்கு உயர்த்தியுள்ளார். கடவுள் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை நிலைநாட்ட பெரிதும் விரும்பினவரே இந்தத் தேவசகாயம் பிள்ளை ஆவார்.

 
இந்தியாவின் திருமணமான பொதுநிலையினரில் முதல் புனிதர் என்ற பெருமையும் மறைசாட்சி தேவசகாயம் பெற்றுள்ளார். இந்திய மண்ணில் இரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த முதல் இந்தியப் புனிதர் என்ற புகழும் அவருக்குக் கிடைத்துள்ளது.


வத்திக்கானில் இந்நிகழ்வு நடைபெற்ற வேளை கன்னியாஸ்திரிகளால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
——–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *