அலரி மாளிகைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தாக்குதல்!

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதேவேளை, இன்று முற்பகல் அலரி மாளிகை முன்பாக ஒன்றுகூடியிருந்த பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது.


அலரி மாளிகைக்கு அருகில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் பெருமளவில் கூடியுள்ளதுடன் பிரதமர் பதவி விலகக் கூடாது என அவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

 
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் காலிமுகத்திடலில் அவர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 130 பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *