பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நாடளாவிய ரீதியில் நிரப்பு நிலையங்களில் எரிபொருளின் தரத்தை சரிபார்க்க சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
எரிபொருளின் தரம் குறித்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
———————
Reported by : Sisil.L