நுவரெலியாவில் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி வடை விற்பனை

நுவரெலியா பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையைக் காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும்  மூலப்பொருட்களின் விலையை   மைத்திரி -ரணில் ஆட்சியில் (2019)  விற்பனையான விலையையும் தற்போதைய ஆட்சியில் (2022) விற்பனையாகும் விலையையும் காட்சிப்படுத்தி  வடை விற்பனை செய்து வருகிறார்.


பொருட்களின் விலையேற்றத்தால் தாம் வடையின் விலையை அதிகரித்துள்ளதாகவும், வடையின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் வினவியதால், வடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் விலையைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
————–


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *