ரம்புக்கனை வன்முறைகள் குறித்து வெளிப்படையான சுதந்திரமான விசாரணைகள் அவசியம் – அமெரிக்கத் தூதுவர்

ரம்புக்கனை வன்முறை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது;


இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவுடன் ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையின் அநீதி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.


ரம்புக்கனை வன்முறை குறித்த முழுமையான வெளிப்படையான விசாரணையின் அவசியம் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.


அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முன்னர் எப்போதையும் விட தற்போது அவசியமாகவுள்ளது.
—————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *