நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (20) காலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எங்களிடம் வரையறுக்கப்பட்ட தெரிவுகள் உள்ளன, இறந்தவரின் மனைவியிடமும் பேசினேன். உயிரிழந்தவர் எமது கட்சியின் சந்தித் சமரசிங்கவின் ஆதரவாளர். அவர் தீ வைக்கப் போகவில்லை. இந்தச் சம்பவங்கள் குறித்து விரைவில் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவோம்.” என்றார்.
———————
Reported by : Sisil.L