ஹட்டனில் பஸ் சேவைகள் இடம்பெறாததால் கலவரத்தில் ஈடுபட்ட பயணிகள்

சிபெட்கோ எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி செல்லும் நீண்ட தூர இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இன்று (19) காலை தமது சேவையிலிருந்து பின்வாங்கியதால் அட்டன் பஸ் நிலையத்தில் பயணிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.


ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து நீண்ட தூர பஸ்கள் இயங்காததால், கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தொழில் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு வந்தவர்கள் இவ்வாறு கலவரமாக நடந்து கொண்டனர்.


இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களை தமது சேவையில் இணைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இடையூறுகள் காரணமாகவே தாம் பேருந்து சேவையிலிருந்து விலகியதாக இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.


எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *