இலங்கை அரசுக்கு அளிக்க ரூ.20,000 வழங்கிய தமிழக யாசகர்

தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தான் யாசகம் பெற்ற பணத்தில் இந்திய மதிப்பில் 20,000 ரூபாவை பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்குவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கையளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற யாசகரே இலங்கைக்கு வழங்க 20,000 ரூபாவை வழங்கியுள்ளார்.


தான் யாசகமாகப் பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக இவர் வழங்கி வருகிறார்.


கொரோனா தொற்றுக் காலத்தில், தனது சேமிப்பிலிருந்து பல முறை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.


இதுவரை ரூபா 4 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை கொரோனா நிவாரண நிதியாக பூல்பாண்டி வழங்கியுள்ளார்.


இந்த நிலையில், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதை ஊடகங்கள் ஊடாக அறித்த அவர், இலங்கை மக்களுக்கு உதவுமாறு இலங்கை அரசிடம் கையளிப்பதற்காக தான் யாசகம் பெற்று சேமித்து வைத்த 20,000 ரூபா பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *