தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்தத் தேர்தலில் மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இன்று மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்காமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
————-
Reported by : Sisil.L