நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தக் கால கொண்டாட்டங்கள் இம் முறை இன்று (ஏப்ரல்1) ஆரம்பமான நிலையில் நுவரெலியா பஸ் தரிப்பிடம் முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் பின் வசந்த கால ஆரம்ப நிகழ்வு வரை சென்றது. விழா நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக வந்த சிலர், அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டதோடு விழாவை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், நடத்துனர்கள் காலை 8.00 மணி முதல் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கான எரிபொருள் வழங்கப்படுகின்றது. தனியார் பஸ்களுக்கான எரிபொருள் வழங்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டது.
Reported by : Sisil.L